செவனகல பகுதியில் இடம்பெற்ற கொலை முயற்சியொன்றுடன் தொடர்புடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.உயிருள்ள நல்ல பாம்பு ஒன்றுடன் ஒருவரை நீர்த்தாங்கி ஒன்றுள் அடைத்துக் கொலை செய்ய முயற்சி மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் பொலிஸில் சரணடைந்ததன் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர் இம்மாதம் 22ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
செவனகலயிலுள்ள கரும்புத் தோட்டம் ஒன்றில் உள்ள நீர்த்தாங்கியினுள் நபர் ஒருவரது கை, கால்களைக் கட்டிப்போட்டு அவருடன் நல்ல பாம்பொன்றைப் போட்டு சந்தேகநபர் அடைத்து வைத்ததாகத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவத்தினால் பாம்புக் கடிக்கு உள்ளான நபர் தற்போது எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply