உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டிக்கு
பிறகு யுவராஜ் சிங் மீது தொடுக்கப்பட்ட விமர்சனம் நியாயமற்றது என விராட்
கோஹ்லி தெரிவித்துள்ளார்.
சார்ஜாவில் கடந்த வியாழன் நடைபெற்ற
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 8
விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு எதிரான இந்த
போட்டியில் யுவராஜ் சிங் 29 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்றுக்
கொடுத்தார்.
உலகக் கிண்ண இருபதுக்கு-20 கிரிக்கெட் போட்டிக்குப்
பிறகு யுவராஜ் சிங் மீது தொடுக்கப்பட்ட விமர்சனம் நியாயமற்றது. 2007இல்
உலகக் கிண்ண இருபதுக்கு-20 போட்டி, 2011இல் உலகக் கிண்ணம் என்பவற்றை
தந்தவர் யுவராஜ் சிங் தான், அவரைப் போன்ற ஒரு வீரர் அணியில் இருப்பது மிக
முக்கியமானது என்றார்.
கடந்த 6ஆம் திகதி இடம்பெற்ற உலகக் கிண்ண
இருபதுக்கு-20, இலங்கை அணியுடனான இறுதிப்போட்டியில் யுவராஜ் சிங் 21
பந்துகளில் 11 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டதால், தோல்விக்கு அவரே
காரணமென விமர்சனங்கள் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply