பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு பிரதான பயிற்சியாளர் மற்றும் உப
பயிற்சியாளர்க் குழுவினருக்கான விண்ணப்பங்களை பாகிஸ்தான் கிரிக்கட் சபை
கோரியுள்ளது.
பாகிஸ்தான் அணியின் தற்போதைய பயிற்சியாளராக
செயற்பட்டு
வரும் மொயின் கானின் ஒப்பந்தத்தை நீடிக்கப் போவதில்லையென பாகிஸ்தான்
கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் பாகிஸ்தான் அணியின்
களத்தடுப்பு பயிற்றுவிப்பாளர் சுஹைப் மொஹமட் மற்றும் துடுப்பாட்ட ஆலோசகர்
சஹீர் அப்பாஸ் ஆகியோரது ஒப்பந்தத்தையும் இடைநிறுத்துவதற்கு பாகிஸ்தான்
கிரிக்கட் சபை தீர்மானித்துள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கட் சபை இந்த ஆண்டில் இரண்டாவது தடவையாக பயிற்சியாளருக்கான விண்ணப்பங்களை கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply