கொழும்பில் எலிகளின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுவதனால் அதனை
கட்டுப்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கொழும்பு மாநகர
சபை சுகாதார தலைமை மருத்துவ அதிகாரி பிரதீப் காரியவசம் தெரிவித்தார்.
எமது கூடியளவான தொழிலார்கள் தற்போது டெங்கு ஒழிப்பு திட்;டத்தில்
ஈடுபட்டிருப்பதால் எம்மால் இதனை முன்னெடுத்து செல்ல முடியாதுள்ளது. எனினும்
எலிகளை ஒழிப்பதற்கான இத்திட்டத்தினை மேற்கொள்வதற்கு கூடிய சீக்கிரம் ஒரு
நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.மேலும் கோட்டை, துறைமுகம், பொரளை மற்றும் மருதானை ஆகிய இடங்களில் அமைந்துள்ள சுகாதாரமற்ற உணவகம், சரக்கு கப்பல் மற்றும் கிடங்குகளிலேயே எலிகளின் இனப்பெருக்கம் அதிகமாக காணப்படுகின்றது. எலிகளின் எண்ணிக்கையை கட்டுப்டுத்தவில்லையாயின் எலிகளினால் ஏற்படும் மஞ்சல் காமாலை, எலிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்கள் ஏற்படவும் வாய்ப்புக்கள் அதிகாமாக உள்ளது என தெரிவித்தார்.
இந்த வருடத்தில் கொழும்பில் மாத்திரம் மஞ்சல்காமாலை நோயினால் 34 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகல்வல்கள் பதிவாகியுள்ளன.மேலும் நாடு பூராகவும் மார்ச் மாதத்தில் 708 பேரும் ஏப்ரல் மாதத்தில் 221 பேரும் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் தொற்று நோய்பற்றி அவர் தெரிவிக்கையில் இவ்வாறான நோய்கள் அநேகமாக நெல் வேளாண்மை பகுதிகளான மேல் மாகாணம், காலி, ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய பிரதேசங்களிலேயே அதிகளவில் பரவி வருவதாக சுகாதார அமைச்சின் தலைமை தொற்று நோய்ப்பிரிவின் வைத்தியர் பபா பலிகவதன் தெரிவித்தார்.
மேலும் நாம் அனைத்து விவசாயிகளிடமும் வயல் நிலங்களுக்கு செல்வதற்கு முன்பதாக முற்காப்பு மருந்து வகைகளை பிரயோகிக்குமாறு கேட்டிருந்தோம்.ஆனால் விவசாயிகளுக்கு இதனை பிரயோகித்ததன் மூலம் காய்ச்சல், உடல் வருத்தம், தலைவலி, கண்சிவத்தல் போன்ற நோய்களை எதிர்கொண்டனர்.
எலிகளால் ஏற்படும் தொற்று நோயினால் 2008 ம் ஆண்டில் 6000 பேர் பாதிக்கபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply