blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 19, 2014

அல் கலம் நூல் வெளியீடு - புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரி

தகவல்: ஏ. அனீஸ்  
புல்மோட்டை முஸ்லிம் மத்திய கல்லூரியின் 2014ம் ஆண்டு மாணவத்தலைவர்களுக்கு சின்னஞ் சூட்டும் விழாவில் வெளியிடப்படும் "அல் கலம்" எனும் இந்நூல்
வெளியிடப்பட்டிருப்பது இப்பபடசாலையில் முதன் முறையாக ஒரு மைல்கல்லாகும். 

இந்நூல் ஆசிரியர் கருத்துரைக்கும் போது 

அல் கலம் குறித்து ...

நீர் ஓதுவீராக! மேலும் உமதிரட்சகன் மிக்க கண்ணியத்துக்குரியவன். அவன் எத்தகையவனென்றால், எழுதுகோலைக் கொண்டு (எழுதிக்) கற்றுக்கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் (அல்லாஹ்வாகிய) அவன் கற்றுக்கொடுத்தான்” (அல்-அலக்! 3-5)

மனித சமூகத்தை மேன்மைப்படுத்த வந்த
அறிவியல் ஆயுதம்!
மனிதனின் மடமைக்கு முற்றுப்புள்ளி வைத்து
சிந்திக்க தூண்டிய எழுதுகோல்!
மனிதனுக்கு மதிப்பை, மரியாதையைக் கொண்டுவந்த
அறிவுக்கான அஸ்திவாரம்!
அது - அல் கலம் (பேனா) தான்.

சத்தியத்தை உலகிற்கு ஓங்கியொலித்த வஹியின் ஆரம்பமே பேனாவைப் பற்றிப் பேசுவதை நாம் காண்கிறோம். “இக்ரஎன்ற வார்த்தைதான் வஹியின் ஆரம்ப சொல்லாக காணப்படுகிறது. அதற்குஓதிவீராக, வாசிப்பீராக, கற்பீராகஎன்பதுதான் அர்த்தமாகும். எனவே, சத்தியத் தூதின் தொடக்கமே அறிவை வலியுறுத்திப் பேசுவதையும், அந்த அறிவுத்தேடலுக்கு அச்சாணியாய் இருக்கும் பேனாவைப் புகழ்ந்து பேசுவதையும் காண்கின்றோம். மேலே குறித்துக்காட்டிய சூரத்துல் அலக்கின் ஆரம்ப வசனங்கள் எமக்கு இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன.


அல்குர்ஆன்அல்-கலம்என்ற பெயரில் ஒரு அத்தியாயத்தையே கொண்டிருக்கிறது என்றால், அந்தப் பேனாவின் மகத்துவமும், அதில் பொதிந்துள்ள அருள்களும் எத்தகையவை என்பதை நாம் விளங்கிக்கொள்ள முடியும்.

நான், எழுதுகோலின் மீதும், (அதன் மூலம்) அவர்கள் எழுதுகின்றவற்றின் சத்தியமாக!” (அல்கலம்-01)

அல்லாஹூதஆலா எந்தவொன்றின் மீதும் சத்தியமிடுவதாக இருந்தால், நிச்சயமாக அவை பெறுமதியுடையவையாகவே காணப்படுகின்றன. அல்குர்ஆனில், பல்வேறு உலகப் பொருட்கள் மீது அல்லாஹ் சத்தியம் செய்வதைக் காண்கிறோம். காலம், சூரியன், சந்திரன், முற்பகல், இரவு, நட்சத்திரம், அத்தி, சைதூன் போன்ற பல்வேறு பொருட்கள் மீது அல்லாஹ் சத்தியமிடுகிறான். அந்தப் பொருட்களின் பெறுமதியை மனிதனுக்கு உணர்த்துவதே அவ்வாறு சத்தியமிட்டுக் கூறுவதன் நோக்கமாகும்.

இந்த வரிசையில் பேனா மீது சத்தியமிடுவதும் இந்த அடிப்படையில் தான் என்பதை நாம் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும். மனித சமூகம் அறிவு தேடுவது அவசியமாகும். அதிலும் முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை அறிவு தேடுவது வாஜிபாகும். ஏனெனில், “கல்வியறிவு ஒரு முஸ்லிமின் தொலைந்து போன சொத்து..அதனை எங்கு காண்கிறீர்களோ, அங்கு அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.” என நம் தூதர் நபி (ஸல்) அவர்களது சமூகமான நாம் அறிவியல் சமூகமாக மாற வேண்டுமாயின், அல்லாஹ்வின் அருளான இந்தப் பேனாவைப் பயன்படுத்த வேண்டும்.

அந்த வகையில், அறிவியலுக்கு அடித்தளமானபேனாவை (அல்-கலம்)” முன்னிறுத்தி உம்முடன் நாம் பேசுகிறோம். பேனாவுடனான எமது அறிவு தேடும் நெடுந்தூரப் பயணம் மறுமை நாள் வரைக்கும் தொடரும். இன்ஷா அல்லாஹ் தொடர வேண்டும். அதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!

இம்மலரை சிறபாக வெளியிட அயராது பாடுபட்ட இதழாசிரியர் ஏ.ஏல்.றியாஸ் ஆசிரியர் அவர்களுக்கு East News First  நன்றி கூறுகிறது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►