நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி தலைவர் வாட்சன் முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார்.
இதன்படி ஐதராபாத் அணியைச் சேர்ந்த தவான், பிஞ்ச் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
பிஞ்ச் 2ஓட்டங்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து தவானுடன் வார்னர் ஜோடி சேர்ந்தார். இருவரும் அடித்து ஆட முயன்றனர். ஆனால் ராஜஸ்தான் வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சினால் ஓட்டங்களைக் குவிக்க திணறினர்.
தவான் 38 ஓட்டங்களுடனும், வார்னர் 32 ஓட்டங்களுடனும் வௌியேறினர்.
அதன்பின் வந்த வீரர்கள் அதிரடியாக விளையாடாததால் ஐதராபாத் 133 ஓட்டங்களில் சுருண்டது.
ராஜஸ்தான் அணி சார்பில் குல்கர்னி, ரிச்சார்ட்சன், பாடியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகள் எடுத்தனர்.
134 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் ராஜஸ்தான் அணி களம் இறங்கியது. எனினும் நாயர், சாம்சன், ஜான்சன் ஆகியோர் தலா 3 ஓட்டங்களுடன் வௌியேறி அதிர்ச்சி அளித்தனர்.
ஆனால், மறுமுனையில் ரகானே நிதானமாக நின்று அரை சதம் அடித்தார். அவர் 59 ஓட்டங்களில் ஆட்டமிழந்ததும் ராஜஸ்தான் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது.
ஆனாலும் பின்னி- பால்க்னர் ஆட்டத்தால் ராஜஸ்தான் 19.3 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து, 135 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பின்னி 48 ஓட்டங்களுடனும், பால்க்னர் 8 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்
No comments:
Post a Comment
Leave A Reply