blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 19, 2014

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் விடுதலை செய்யப்படுவார்களா?

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை சம்பவத்தின் ஏழு குற்றவாளிகளையும் விடுதலை செய்யும், தமிழக அரசின் தீர்மானத்தை ஆட்சேபித்து மத்திய அரசாங்கம் தாக்கல் செய்துள்ள மீள் பரிசீலனை மனு மீதான தீர்ப்பு அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ளது.

இந்த மனு மீதான தீர்ப்பை எதிர்வரும் 26 ஆம் திகதிக்குள் வழங்கவுள்ளதாக கோவையில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட இந்தியாவின் பிரதம நீதியரசர் ப.சதாசிவம் கூறியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதியுடன் ஓய்வுபெறவுள்ள நிலையில் ப.சதாசிவம் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த முருகன், சாந்தன் பேரறிவாளன் ஆகியோரின் தண்டனையை கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருந்தது.
இந்த தீர்ப்பை அடுத்து குறித்த மூவர் உள்ளடங்களாக ராஜீவ் காந்தி கொலை வழக்கின் ஏனைய குற்றவாளிகளான நளினி, ரொபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேரையும் விடுதலை செய்யவுள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் அறிவித்திருந்தார்.
தமிழக அரசின் தீர்மானத்தை ஆட்சேபித்து மத்திய அரசாங்கம் தாக்கல் செய்துள்ள மீள் பரிசீலனை மனு தற்போது இந்திய உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►