blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 19, 2014

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு சமூக தீர்வு காணப்படும் – ராஜ்நாத் சிங்

இலங்கைத் தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு காண்பதே தமது நோக்கம் என பாரதீய ஜனதாக் கட்சி தெரிவித்துள்ளது.

இந்திய மக்களவைத் தேர்தலின் ஆறாம் கட்ட வாக்குப் பதிவு அடுத்த வாரம் தமிழகத்தில் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரப் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் திருச்சியில் நேற்று நடைபெற்ற பிரசாரக் கூட்டமொன்றில் உரையாற்றிய பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங், இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டு தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கூறியுள்ளார்.
திராவிட முன்னேற்றக் கழகத்தினால் அறிமுகம் செய்யப்பட்ட சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றப்போவதில்லை என தெரிவித்துள்ள அவர் அயோத்தியில் இராமல் கோயில் கட்டவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தமிழக மீனவர்கள் மாத்திரமல்லாது இந்திய மீனவர்கள் அனைவரது நலனையும் கருத்திற்கொண்டு தேசிய மீனவர் நல ஆணைக்குழுவை உருவாக்கவுள்ளதாகவும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
இம்முறை மக்களவைத் தேர்தலில் தமது கட்சி 300ற்கும் மேற்பட்ட ஆசங்களை கைப்பற்றி வெற்றிவாகை சூடும் எனவும் நரேந்திர மோடி அடுத்த பிரதமராக பதவியேற்பார் எனவும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
புதிய அரசாங்கத்தை உருவாக்குவதற்கு அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், திராவிட முன்னேற்றக் கழகம் அல்லது வேறு கட்சிகளின் தயவு தேவைப்படாது எனவும் பாரதீய ஜனதாக் கட்சியின் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►