blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 12, 2014

தாக்குதலுக்கு இலக்கானவர் ஐந்து மாதங்களின் பின் பலி





தாக்குதலுக்கு இலக்கானவர் ஐந்து மாதங்களின் பின் பலி
தாக்குதலுக்கு இலக்காகி ஐந்து மாதங்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாக தங்கொட்டுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தங்கொட்டுவ பகுதி ஓட்டுத் தொழிற்சாலையொன்றில் பணி புரிந்து வந்த ஊழியரே இவ்வாறு பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இவர் உயிரிழந்தவருடன் ஒன்றாக பணிபுரிந்த ஊழியர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 28ம் திகதி, மதுபோதையில் இருந்த இருவருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் காயமடைந்தவர் தங்கொட்டுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின் நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட இவர் நேற்று மரணமடைந்துள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை தங்கொட்டுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►