blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 12, 2014

வெருகல் படுகொலையின் 10வது ஆண்டு நினைவு நாள்


வெருகல் படுகொலையின் 10வது ஆண்டு நினைவு நாள் (படங்கள்) மட்டக்களப்பு வாகரையில் வெருகல் படுகொலையின் 10 ஆவது ஆண்டு நினைவு நாள் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியினால் நினைவு கூறப்பட்டது.

நேற்று முன்தினம் மாலை 5 மணிக்கு கதிரவெளி மலைப் பூங்காவில் இடம்பெற்ற நிகழ்வின் போது கட்சியின் தலைவரும் கிழக்கு மாகான சபை உறுப்பினருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் நிகழ்விற்;கு தலைமை தாங்கினார்.
இதன்போது தேசியக் கொடி, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி கொடி, கிழக்கு மாகாண சபைக் கொடி போன்றவை ஏற்றப்பட்டு இலங்கை தேசிய கீதம் இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வெருகல் படுகொலை தொடர்பான நினைவுப் பேருரையை தலைவர் உரையாற்றினார்.
பின்பு மாலை 5 மணியளவில் படுகொலையின்போது உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து மௌன இறை வணக்கத்துடன் ஈகைச் சுடர் ஏற்றப்பட்டது.

இவ் நிகழ்வில் உயிர் நீத்தவர்களின் பெற்றோர்கள், மனைவிமார்கள், பிள்ளைகள், சகோதரங்கள் மற்றும் கட்சி உறுப்பினர்களினால் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இதன்போது உறவினர்கள் உயிர் நீத்த தங்களது சொந்தங்களை நினைந்து கண்ணீர் விட்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள்.
2004 ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற இவ் வெருகல் படுகொலையின்போது 200 இற்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் படுகொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►