சிறார்களை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய
ரோமன் கத்தோலிக்க பாதிரிமார் செய்த தவறுகளுக்காக பாப்பரசர் பிரான்ஸிஸ்
மன்னிப்பு கோரியுள்ளார்.
ஏற்படுத்தப்பட்ட தனிப்பட்ட மற்றும் தார்மீக
பாதிப்பு குறித்து திருச்சபை உணர்ந்திருக்கிறது என்றும், அந்தச்
சம்பவங்களுக்கு பொறுப்பானவர்கள் தடைகளுக்கு முகம் கொடுக்க நேரிடும் என்றும்
பாப்பரசர் கூறியுள்ளார்.
சிறார் துஷ்பிரயோக பாதிரிமாரின் விவகாரத்தில்
பாப்பரசர் தன்னைத் தானே மாட்டிக் கொள்கிறார் என்று சில கத்தோலிக்கர்கள்
பாப்பரசர் மீது குற்றஞ்சாட்டுகிறார்கள்.
அண்மைய காலத்தில் திருச்சபையை உலுக்கிய பெரிய இந்த
ஊழல் குறித்த பாப்பரசரின் மிகப் பலமான கண்டனம் இது என்று பிபிசி
செய்தியாளர் கூறுகிறார்.
No comments:
Post a Comment
Leave A Reply