blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 12, 2014

சிரியாவின் குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற இரு கார் குண்டு


 
சிரியாவின் குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்ற இரு கார் குண்டு வெடிப்புகளில் 25 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 100ற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியாவின் கரம் அல் லூல் பிராந்தியத்தில் அதிக மக்கள் குடியிருப்புகள் உள்ள வீதியில் இந்த இரு கார் குண்டுகள் வெடிக்க வைக்கப்பட்டுள்ளன.

இந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தவர்களில் சிறுவர்களும், பெண்களும் அதிகளவில் அடங்குவதாக ஏ.எவ்.பி செய்தி சேவை குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சிரிய ஜனாதிபதி பஷார் அல் ஆஷாத்துககு எதிராக நடைபெற்று வரும் கிளர்ச்சிகளில் 150,000 ற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் 2.6 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் ஏனைய நாடுகளுக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►