2013 - 14இல் இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில், தமிழக மீனவர்கள்
படகுகள் வலைகளை இழந்து பொருளாதார ரீதியில், ரூ.50 கோடி வரை நஷ்டம்
அடைந்துள்ளனர். இது தங்களுக்கு இருண்ட காலம் என மீனவர்கள் தெரிவித்தனர்.
மீன்வளம் நிறைந்த பாக்கு நீரிணை கடலில், பாரம்பரியமாக மீன்பிடித்த ராமேஸ்வரம், புதுக்கோட்டை, நாகை மாவட்ட விசைப்படகு மீனவர்களுக்கு, இலங்கை கடற்படையால் 2013- - 14 ம் ஆண்டு துயரமான ஆண்டாக அமைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன் பிடிக்க தடை காலம் (ஏப்., 15 முதல் மே 29 வரை) முடிந்தவுடன், ஜூன் 1 முதல் ஏப்., 15 வரை, விசைப்படகுகளில் 126 நாட்களுக்கு மீன்பிடிக்க செல்லலாம். இதில் மீனவர்கள் ஸ்டிரைக், இலங்கை கடற்படை தாக்குதல் பீதியால், 80 முதல் 90 நாட்கள் மட்டுமே மீன்பிடிக்க முடிகிறது.
கடந்த 14 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, 2013 ஜூன் 1 முதல் 2014 ஏப்., 10 வரை, இலங்கை கடற்படையினர் 36 முறை, தமிழக மீனவர்களை கைது செய்தனர். 802 பேரை சிறையில் அடைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட ரூ.100 கோடி மதிப்பிலான 159 படகுகள், இலங்கை கடற்கரையில் சேதமடைந்ன.
மேலும், 12 விசைப்படகுகள் மீது, இலங்கை கடற்படை கப்பல்கள் மோதியதில், ரூ.50 லட்சத்திற்கு நஷ்டம் ஏற்பட்டது. 600 படகுகளில் இருந்த வலைகள் கடலில் மூழ்கடிக்கப்பட்டன. 4 00 படகுகளில் இருந்த ´ஜிபிஎஸ்´ கருவி, மொபைல் போன், மீன்களை கொள்ளையடித்து, மீனவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தி, படுகாயம் ஏற்படுத்தினர்.
இச்சம்பவத்தால், தமிழக மீனவர்களுக்கு ஏற்பட்ட 50 கோடி ரூபாய் இழப்பீடு, ஈடு செய்ய முடியாதது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டு, கடன் சுமையுடன் வாழும் மீனவர்களுக்கு, 2013--14 ம் ஆண்டு ´இருண்ட காலமாக´ அமைந்தது.
இதுகுறித்து இந்திய, இலங்கை நிரபராதி மீனவர் விடுதலைக்கான கூட்டமைப்பு பிரதிநிதி யூ.அருளானந்தம் கூறியதாவது: மீனவர் வரலாற்றில், இந்தாண்டு ´இருண்ட ஆண்டாக´ மாறியது. ராணுவ பலம், பொருளாதாரத்தில் முன்னேறியதாக கூறும் இந்திய அரசு, இலங்கை அரசின் நிர்ப்பந்தத்தால், சொந்த மீனவர்களை பாதுகாக்க தவறி விட்டது. நடுக்கடலில் சித்ரவதைக்கு ஆளாகும், தமிழக மீனவர்கள் மாற்று தொழில் புரிய, மத்திய அரசு அக்கறை காட்டவில்லை, என்றார்.

No comments:
Post a Comment
Leave A Reply