ஜ.நா மன்றத்தின் சுற்றுச்சூழல் செயற்றிட்டத்தின் ஏற்பாட்டில் ஆசிய
பசுபிக் பிராந்திய சிறார்களுக்கிடையில் நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில்
இலங்கைச் சிறுமியின் ஓவியம் முதலிடத்தைப் பெற்றுள்ளது.
எட்டு வயதான செனுலி பெரேராவிற்கே முதலிடம் கிடைத்துள்ளது.
“உணவு வீண்விரயமும், பூமிப் பந்தின் பாதுகாப்பும்”
எனும் தலைப்பில் நடத்தப்பட்ட இந்த ஓவியப்போட்டின் மையக் கருத்தாக “உணவை
பாதுகாப்பீர், அதன்மூலம் பூமியை பாதுகாப்பீர், உணவை விரயம் செய்வது உலகை
விரயம் செய்வதாகும்” என காணப்படுகின்றது.
இந்த ஓவியப் போட்டியில்
ஆசிய பசுபிக் பிராந்தியத்தைச் சேர்ந்த 63 ஆயிரத்து 700 சிறார்களின்
ஓவியங்கள் இடம்பெற்றிருந்ததாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.
முதலிடத்தினை பெற்றுள்ள செனுலி பெரேராவிற்கு ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பணப் பரிசு வழங்கப்படவுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply