ராஜீவ் கொலை வழக்குத் தொடர்பில் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது.
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தூக்குத் தண்டனை கைதிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கும் போதே இவ்வாறு உத்தரவிட்டது.தமிழக அரசின் முடிவுக்கு எதிராக மத்திய அரசு தாக்கல் செய்த மனு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்படுகிறது.
மேலும் 7 பேர் விடுதலை செய்யப்படுவது குறித்த வழக்கு விசாரணையை 3 மாதத்தில் நடத்தி முடிக்க அரசியல் சாசன அமர்வுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தீர்ப்பில் குற்றவாளிகளை விடுதலை செய்வது குறித்த வழக்கில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும் இதில் 7 விதமான விஷயங்கள் ஆராயப்பட வேண்டியது அவசியமாகிறது. இதுபோன்ற வழக்கை முதன்முறையாக உச்ச நீதிமன்றம் எதிர்கொள்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply