2014 க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் முன்கூட்டியே தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்பதிவுத் திணைக்களம் கேட்டுக் கொண்டுள்ளது.
இதன்படி பாடசாலை அதிபர்களுக்கு இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் தேசிய அடையாள அட்டை அச்சிடப்படவிருப்பதால் முன்கூட்டியே
விண்ணப்பித்தல் சிறந்தது என ஆட்பதிவுத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வருடம் ஒக்டோபர் 31ம் திகதியாகும் போது 16 வயதை பூர்த்தி செய்யும் மாணவர்கள் தேசிய அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க முடியும்.
இதேவேளை க.பொ.த உயர் தர பரீட்சை விடைத்தாள் மீள் திருத்தத்தின் பின் இன்று அல்லது நாளை
முடிவுகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடைத்தாள் மீள் திருத்தத்திற்கு 50,000 வரையான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
Leave A Reply