தமிழீழ விடுதலைப் புலிகளை மீளிணைக்கின்றார் என்று இலங்கை அரசால் குற்றஞ்சாட்டப்படும் நெடியவன் தொடர்பில் இலங்கை அரசுடன் பேச்சு நடத்தப்படவுள்ளது என்று நோர்வே வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன.
விடுதலைப் புலிகள் அமைப்பை மீளுருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார் என்று
தெரிவித்து நெடியன் மீது இன்ரபோல் ஊடாக சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது இலங்கை அரசு.
இவரது நிதியுதவியிலேயே வடபகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளை மீளிணைக்கும் செயற்பாடு இடம்பெற்று வருகின்றது என்று தெரிவித்திருந்த அரசு, நெடியவன் நோர்வேயிலிருந்தே இயங்கி வருவதாக இலங்கை அரசு தெரிவித்திருந்தது.
இந்தநிலையிலேயே இன்ரபோலின் பிடிவிறாந்து தொடர்பில், நோர்வேக்கான இலங்கைத் தூதுவருடன் நோர்வே அரசு கலந்துரையாடவுள்ளது என்று நோர்வே வெளிவிவகார அமைச்சுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
Leave A Reply