உலக மலேரியா ஒழிப்புத் தினம் இன்றாகும்.
நாட்டில் 2008 ஆம்
ஆண்டின் பின்னர் மலேரியாவினால் உயிரிழப்புக்கள் எதுவும் பதிவாகவில்லை
என்பது இலங்கை பெற்றுக்கொண்ட பாரிய வெற்றி என சுகாதார அமைச்சு
தெரிவிக்கின்றது.
இலங்கையில் குறுகிய காலத்திற்குள் அதிக நோயாளர்கள் 1934 மற்றும் 1935 ஆம் ஆண்டுகளிலேயே பதிவாகினர்.
இந்த காலப்பகுதியில் 15 இலட்சம் நோயாளர்கள் மலேரியாவினால் பீடிக்கப்பட்டதுடன், 80 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கடந்த
காலங்களில் மலேரியாவினால் பீடிக்கப்பட்ட எவரும் பதிவாகவில்லை என்ற
போதிலும், நாட்டிற்கு அதிகளவிலான வெளிநாட்டவர்கள் வருகை தருகின்றமையினால்,
மலேரியா ஏற்படும் அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டுகின்றது.
இதேவேளை,
மலேரியா அற்ற நாடென்ற ரீதியில் உலக மலேரியா ஒழிப்புத் தினத்தை
அனுஷ்டிப்பது சிறந்த விடயம் என உலக மலேரியா ஒழிப்புத் தினத்தை முன்னிட்டு
ஜனாதிபதி வெளியிட்டுள்ள தகவலில் கூறப்பட்டுள்ளது.
நாட்டில் மலேரியாவை ஒழிப்பதற்கான வேலைத்திட்டங்களை சுகாதாரத்துறையினர் தம்வசம் கொண்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவிக்கின்றார்.
அனைத்து
வழிகளிலும் மலேரியாவை நாட்டில் இருந்து ஒழித்தல் மிகவும் பாதுகாப்பானது
என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply