நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் புத்தளம் அநுராதபுரம் வீதியில் ஐந்தாம் மைல் கல் பிரதேசத்தில் வைத்தே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
புத்தளம் நகரில் இடம்பெற்ற நாடக காட்சி ஒன்றிற்கு அதிதியாக அழைக்கப்பட்டு அந்நிகழ்வில் கலந்து கொண்டு விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே வேன் ஒன்றில் வந்த நால்வர் தன்னை பலாத்காரமாக வேனினுள் கடத்திச் சென்றதாகவும் வேனில் வந்த ஒருவர் தனது மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்ததுடன் வேனினுள் இருந்த மற்றைய இருவர் தன்னைத் தாக்கியதாகவும் அதிபர் பொலிஸாரிடம் சம்பவம் தொடர்பில் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு சுமார் 200 மீற்றர் தூரம் வேனில் தன்னைக் கொண்டு செள்றவர்கள் வேனிலிருந்து தன்னைக் கீழே இறக்கி தன்மீது பெற்றோல் ஊற்றி தீ மூட்ட முற்பட்டபோது தான் அவர்களிடமிருந்து தப்பி ஓடியதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
பின்னர் தன்னைக் கடத்தியவர்கள் அவர்களது வேனில் அங்கிருந்து சென்றதன் பின்னர் அவர்கள் கைவிட்டுச் சென்ற தனது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தான் தனது வீட்டுக்குச் சென்றதாகவும் அவர் வைத்தியசாலை பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்
No comments:
Post a Comment
Leave A Reply