blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, April 7, 2014

18 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையின் கொண்டாட்டம்

கடந்த 7 ஆண்டுகளுக்குள் நான்கு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளில் இறுதிப் போட்டிவரை வந்து தோல்வியடைந்த இலங்கை அணி, இம்முறை இந்தியாவுடன் மோதி அடைந்த வெற்றியின் மூலம் டி-20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்துக் கொண்டது. கடந்த நான்கு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளின் முடிவிலும் தோல்வியின் கவலைகள் தான் இலங்கை அணி ரசிகர்களிடமிருந்து வெளிப்பட்டிருந்தன. 

ஆனால், இம்முறை காத்திருந்து பெற்ற வெற்றியின் கொண்டாட்டங்களால் முழு நாடுமே அதிர்ந்துபோனது. 18 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கை முதன்முறையாக இந்த உலகக் கிண்ண வெற்றிக் களிப்பை கொண்டாடுகிறது.
கொழும்பு காலிமுகத் திடல் நேற்று ஞாயிறு இரவு இலங்கை கிரிக்கெட் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது.

கொழும்பின் வீதிகள் எங்கிலும் நேற்றிரவு முழுவதும் தேசியக் கொடியை ஏந்தியவாறு ரசிகர்கள் ஓடித்திரிந்து மகிழ்ந்தனர்.
வாகனப் போக்குவரத்துப் பொலிசாரும் ரசிகர்களின் வாகனங்களைத் தடுக்காது போக்குவரத்து சட்டங்களை அமல்படுத்தாமல் சற்று ஒதுங்கியிருந்ததையும் காணமுடிந்தது.

1996-ம் ஆண்டில் அர்ஜுன ரணதுங்க தலைமையிலான அணி 50 ஓவர் உலகக் கிண்ணத்தை வென்றெடுத்ததன் பின்னர், இப்போது லசித் மாலிங்க தலைமையில் 20 ஓவர் உலகக் கிண்ணம் இலங்கையிடம் வந்து சேர்ந்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►