blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, April 7, 2014

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 14 மாதக் குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரிடமிருந்து 28,00,000 ரூபா தங்கம் கைப்பற்றப்பட்டது

கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தின்   14 மாதக் குழந்தை உட்படலான நால்வரிடமிருந்து 8  தங்க நகைத் துண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும்  இவற்றின் பெறுமதி  28,00,000 ரூபா என்றும்  சுங்க ஊடகப் போச்சாளர் ஜீ.ஏ. லெஸ்லி காமினி மெட்ரோ நியூஸுக்கு தெரிவித்தார்.

கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து சென்னைக்குச் செல்லவிருந்த போதே இவர்களிடமிருந்து இவை கைப்பற்றப்பட்டன.

இதேவேளை, சட்டவிரோதமாக  சென்னைக்கு  788 கிராம்  தங்கம் கொண்டு செல்ல முயற்சித்த மூன்று பெண்களை  இன்று   கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்ததாகவும் அவர்  மேலும் தெரிவித்தார். 

கொழும்பைச் சேர்ந்த 44, 46, 58 வயதான  பெண்களிடமிருந்து முழுமையாக தயாரிக்கப்படாத 21 தங்க நகைத்துண்டுகள் கைப்ற்றப்பட்ட அவர் தெரிவித்தார்.


No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►