மலேசிய விமானம் பீஜிங் நோக்கி பறக்க ஆரம்பித்த ஒரு மணி நேரத்தில் துணை
விமானி தனது செல்போனிலிருந்து அழைப்பு மேற்கொண்டார் என்றும்.
அதன் பின்னரே
ராடர் பதிவிலிருந்து விமானம் மாயமானது என்று தகவல் வெளியாகி உள்ளது.இது குறித்து மலேசிய நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில் விமானம் ராடார்
கடந்த மார்ச் 8-ம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு சென்ற மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் நடுவானில் மாயமானது. அந்த விமானம் ஆஸ்திரேலியாவை ஒட்டிய தெற்கு இந்தியப் பெருங்கடலில் விழுந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.சம்பவ கடல் பகுதியில் ஆஸ்திரேலியா, சீனா, அமெரிக்கா, மலேசியா உள்ளிட்ட 8 நாடுகளின் போர் விமானங்கள், போர்க்கப்பல்கள் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன. அந்த விமானத்தின் நிலை குறித்து தற்போது வரை தகவல்கள் இல்லாத நிலையில் பல்வேறு நாடுகளின் உளவுத்துறையினர் முரணான தகவல்களை வெளியிட்டு வருகின.
பதிவிலிருந்து மாயமாவதற்கு முன்னர் அதன் துணை விமானி தனது செல்போனிலிருந்து
அழைப்பு ஒன்றை முயற்சித்தார். ஆனால் விமானம் அதிக வேகத்தில் பயணித்ததால்
தொலை தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. துணை விமானி மேற்கொண்ட அழைப்பு
உதவிக்காக மேற்கொள்ளப் பட்டிருக்கலாம் என்று அந்த செய்தியில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply