அமெரிக்காவின் உட்டா மாகாணத்தில்
வீடொன்றை சோதனையிட்ட காவல்துறையினர் குழந்தை ஒன்றின் சடலத்தையும் மேலும் 6
குழந்தைகளின் உடல் எச்சங்களையும் மீட்டுள்ளனர்.
அந்த அட்டைப் பெட்டிகளில் 6 குழந்தைகளின் உடல் எச்சங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன.
குழந்தைகளின் தாய் என்று நம்பப்படுகின்ற 39 வயதுப் பெண் ஒருவரை கைது செய்துள்ள காவல்துறையினர், அவர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளனர்.
10- ஆண்டு காலத்தில் இந்தக் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ள அந்தப் பெண், அவற்றைக் கொலை செய்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்தக் குழந்தைகள் எவ்வாறு உயிரிழந்தன என்பதைக் கண்டறிவதற்காக பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஒவ்வொரு பெட்டியை திறந்துபார்த்த போதும் அதிர்ச்சடைந்த விசாரணையாளர்கள் மிகவும் மனவருத்தம் அடைந்ததாக காவல்துறை பேச்சாளர் ஒருவர் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply