தலாவ - பரகஹவெவ வீதியின் யகலேகம பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் ஒன்று வேகத்தை கட்டுப்படுத்த முடியாது வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.
நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply