மாயமான மலேசிய விமானம் ரேடாரில் இருந்து மறைவதற்கு சிறிது நேரத்திற்கு
முன்னாள் அதன் துனை விமானி தனது செல்போனில் அழைப்பு விடுத்தார் என்று
தகவல்கள் வெளியாகியுள்ளன.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 5 இந்தியர்கள் உள்பட 239
பயணிகளுடன் பீஜீங் சென்ற விமானம் கடந்த மாதம் 8-ந்தேதி அதிகாலையில்
மாயமானது. இந்த விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில்,
தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானம் நொறுங்கி விழுந்திருக்கலாம்
என கருதப்படுகிறது.இதைத்தொடர்ந்து ஆஸ்திரேலியா, சீனா உள்ளிட்ட பல்வேறு
நாடுகளின் விமானங்கள் மற்றும், கப்பல்கள் தெற்கு இந்திய பெருங்கடல்
பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளன. மேலும் விமானத்தின் கறுப்பு
பெட்டியை மீட்கும் நோக்கில், அதற்கான நவீன கருவிகளுடன் ஆஸ்திரேலிய மற்றும்
இங்கிலாந்து நாட்டு கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.
இந்த நிலையில், மலேசியாவில் வெளிவரும் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ள
ஒரு செய்தியில், மலேசியாவின் மேற்கு கடற்கரை பகுதியில் உள்ள பினாங்
தீவுக்கு மேலே விமானம் பறந்த போது, துணை விமானி, தனது செல்போன் மூலமாக
யாருக்கோ அவசர அழைப்பு விடுத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் விமானம்
வேகமாக பறந்ததால் செல்போன் டவர் மாறியதால் இந்த இணைப்பு பாதியிலேயே
துண்டிக்கப்பட்டு உள்ளது. எனினும் பரிக் அப்துல் ஹமிது யாருக்கு தொடர்பு
கொண்டார் என்பதை கண்டறிய முடியவில்லை.
இந்த பகுதியில் பறந்த போது தான், விமானம் ரேடாரில் இருந்து மறைந்தது
என்பதால், அவர் யாரையோ தொடர்பு கொள்ள முயன்றது தெளிவாகிறது என அந்த
செய்தியில் கூறப்பட்டுள்ளது.
எமது தளத்தை பார்வையிட்டோர்
Saturday, April 12, 2014
மலேசிய விமானம் நடுவானில் பறந்த போது துணை விமானி செல்போனில் அவசர அழைப்பு விடுத்தாரா?
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
சர்வதேச குற்றம் என்பதால் மலேசிய விமானம் விழுந்து நொறுங்கி கிடக்கும் இடத்தில் உள்ள தடயங்களை ரஷ்ய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் அழித்து வருகின்றனர...
-
கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் இன்று அதிகாலை 3.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply