கல்முனை, சாய்ந்தமருது பகுதியில் இன்று அதிகாலை 3.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களில் இரண்டு பெண்களும், ஆணொருவரும் அடங்குவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
கொழும்பிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிப் பயணித்த சொசுகு பஸ்சொன்றும், கல்முனை – வவுனியா இடையே போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்சொன்றும் நேருக்குநேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்தில் இரண்டு பஸ்களுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்சின் சாரதி மதுபோதையில் இருந்தமையினால் விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
விபத்து தொடர்பிலான விசாரணைகளை கல்முனை பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply