சென்னை: கொளத்தூர் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் நரசய்யா (50).
சென்னை மாநகராட்சி ஊழியர். இவர், பல ஆண்டுகளாக நாய் வளர்த்துள்ளார்.
அதன்
காதுகள் மற்றும் வாலில் உன்னி இருந்தது. அடிக்கடி சுத்தம் செய்தும் அது
நீடித்தது. இதனால் நாயின் இரு காதுகளையும், வாலையும் வெட்டிவிட்டார். இதை
அறிந்த
தும் சைதாப்பேட்டை புளுகிராஸ் மேலாளர் ஜான் விட்டோ, கொளத்தூர் காவல்
நிலையத்தில் புகார் கொடுத்தார். விலங்கை துன்புறுத்தியதாக, இன்ஸ்பெக்டர்
கந்தகுமார் வழக்கு பதிந்து நரசய்யாவை கைது செய்தார். பின்னர் ஜாமீனில்
விடுவிக்கப்பட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply