blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Saturday, April 12, 2014

பொதுபல சேனாவினரின் பிடிக்குள் சட்டம், ஹக்கீம் விசனம்

(அஸ்ரப் ஏ சமத்)
ஊடகவியலாளர் மாநாடொன்றை பொதுபல சேனா தேரர்கள் குழப்பியது தொடர்பில் ஸ்ரீ.ல.முகாங்கிரஸ் தலைவரும் நீதியமைச்சருமான ரவுப் ஹக்கீம் சிங்கள,ஆங்கில ஊடகங்களுக்கு அனுப்பி வைத்த அறிக்கை!
ஜாதிக பல சேனா என்ற அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டை சங்கைக்குரிய கலபொட அத்தே ஞானசார தேரர் தலைமையில் வந்த பொதுபல சேனாவை சேர்ந்த சங்கைக்குரிய தேரர்கள் குழப்பிய சம்பவம் தற்பொழுது பொதுமக்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கின்றது.
இலங்கையைப் பொருத்தவரை பௌத்த குருமார்கள் சிலரின் தார்மீக தண்மை பற்றி சிறுபாண்மைச் சமுகங்களைச் சேர்ந்தவர்கள் விமர்சிப்பதோ மீளாய்வு மேற்கொள்ளவதோ தகுதிக்கு அப்பாற்றபட்ட விடயம்.

இந்தநிலைமை உருவாகியிருக்கும் சூழ்நிலையில் எவ்வாறாயினும் சட்டத்தையும் ஒழுங்கையும் நிறைவேற்ற வேண்டியவர்கள் நடந்து கொள்ளும் விதம் பொதுமக்களினதும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளினதும் கரிசணைக்குரியதாக ஆகி இருக்கின்றது.
சம்பந்தப்பட்ட நிகழ்வின்போது முர்க்கத்தனமானவன் முறைகள் பிரயோகிக்கப்பட்ட சந்தர்ப்பத்தில் கொம்பணிதெரு பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியும் ஏனைய பொலிசாராரும் அங்கு வெறும் பார்வையளர்களாக இருந்து வேடிக்கைபார்த்துக் கொண்டிருந்ததை குறித்து ஸ்ரீ.ல.மு.கா மிகவும் கவலையடைகின்றது. மக்கள் ஒன்றுகூடுவதற்கு உள்ள சுதந்திரத்திற்கும் பேச்சு சுதந்திரத்திற்கும் உள்ள உரிமை பலவந்தமாக மீறப்பட்டதற்கு அப்பொழுது ஒளிப்பதிவு செய்யப்பட்ட கானொளி காட்சிகள் சான்று பகிர்கின்றன.

இவ்வாறான சர்ந்தப்பங்களில் சட்டத்தின் பார்வையில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டவேண்டிய அரசின் கடப்பாடு தளர்ந்திருப்பது இவ்வாறனஈன செயல்கள் மீண்டும் தலைதூக்குவதற்கு வழிவகுக்கும்.
மோதலுக்குரிய தரப்பிணர் தங்களுக்கிடையில் பிரச்சிணைகள் காணப்பட்டால் அவற்றை சட்டரீதியாக தீர்த்துக் கொள்ள முற்படுவதே மிகவும் உகந்தது என முஸ்லீம் காங்கிரஸ் வலியுறுத்துவதோடு அண்மைக்கால நிகழ்வுகளின் போது சட்டத்தையும் ஓழுங்கையும் பேண வேண்டியவர்களின் உதாசீனப் போக்கையும் வன்மையாக கண்டிக்கின்றது.
அன்று நடந்த கீழ்த்தரமான செயலை அச்சு மற்றும் இலத்திரணியல் ஊடகவியலாளர்கள் உற்று நோக்கிக் கொண்டிருக்கத்தக்கதாக பொலிசார் அங்கு நடந்து கொண்ட விதம் அவர்களுக்கு பின்னணியில் பலமான சக்திகளின் ஆதரவு உள்ளது என்பதை உணர்த்துகின்றது.
இந்த இயக்கத்திணர் கடந்த 2 வருட காலமாக சட்டத்தையும் ஒழுங்கையும் தமது கையில் எடுத்துக் கொண்டு முஸ்லீம் சமுகத்திற்கு எதிராக செயலாற்றுவது பெரும் வேதணைக்குரியதாகும்.

மனித உரிமைகளைப் பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டை இலங்கை கொண்டிருப்பதாக அரசு அறிவித்திருக்கும் தருணத்தில் அரசியல் உரிமைகள் மற்றும் குடிசார் சுதந்திரம் என்பன ஜனநாயக ரீதியாக நிலைநாட்டப்படுவது காலத்தின் இன்றியமையாத தேவையாகும்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►