எமது தளத்தை பார்வையிட்டோர்
Thursday, April 24, 2014
நம்பிக்கை வெற்றியளிக்கும் - உளவள ஆலோசகர் றினோஸ் ஹனிபா
கல்முனை பிரதேச செயலக உளவள ஆலோசகர் றினோஸ் ஹனிபா தனது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது
மாணவ பருவம் என்பது எமது வாழ்ந்நாளில் என்றும் மறக்க முடியாத நினைவூகளாகும், அவைகளை காலத்தால் அழிக்க முடியாது. இப்பருவம் தான் எமது அறிவூ,கற்பனை, ஆற்றல் மற்றும் நம்பிக்கையினை வளர்க்கும் பருவமாகும்.
இம்மாணவ பருவத்தில் எமது நடத்தை ஏனையவர்களை கவரக்கூடியதாக இருக்க வேண்டும். வீட்டில் பெற்றர்களும், சமூதாயத்தில் முதியவர்களும், பாடசாலையில் ஆசிரியர்களும் எம்மை மெச்ச வேண்டும்.எமது நடத்தை சிறந்த நடத்தையாக மாற வேண்டுமாயின். எமது சிந்தனையில் பாரிய மாற்றம் ஏற்பட வேண்டியிருக்கின்றது, எமது சிந்தனையின் ஆக்கவூர்வமான தத்துவங்களே எமது நடத்தையினை தீர்மானிக்கின்றது.
நான் வைத்தியனாக, இன்ஜினியராக, கணக்காளராக ஓர் உளவளத்துணை ஆலோசகராக வருவதற்கு எமது சிந்தனையே முதல் படியாக அமைந்து விடுகிறது, இதனை அறிகைரீதியான நடத்தை வழிகாட்டல் என்று சொல்வார்கள் இத்தகைய இலட்ச்சியங்களை அடைந்து கொள்வதற்கு முதற்படி எமது சிந்தனையே, இதற்கு எதையூம் சாதிக்க முடியூம் என்ற உளரீதியான உறுதியான நம்பிக்கையே எம்மை சிறந்த ஆளுமை உள்ளவர்களாக சமூதாயத்தில் உருவாக்கிகாட்டுகின்றது.
மாணவர்களான எமக்கு நம்பிக்கை என்பது மிக மிக முக்கியமாகும், பாடசாலைகளில் சக நண்பர்கள் சிறந்த பெறுபேரினை பெறும் பொழுது நாம் நம்பிக்கை இழந்து விடக்கூடாது. உலகில் கிண்னாஸ் சாதனை புரிந்தவர்களில் பலர் எம்மாலும் சாதனை படைக்க முடியூம் என்று முயற்சி செய்தார்கள். ஈற்றில் வெற்றி பெற்றார்கள், எமது நம்பிக்கையினை எமக்குள் இருந்து கொண்டுவருவதற்கு முயற்சி என்ற துடுப்பு மிக அவசியமாகின்றது.
மாணவர்களாகிய நீங்கள் உங்களது இலக்கினை அடைந்து கொள்வதற்கு நம்பிக்கை அடிப்படையாக இருப்பதோடு, அதை வெளிக் கொண்டுவருவதற்கு முயற்சி முதுகெழும்பாக இருக்கின்றது.
எமது பாடங்களில் நாம் எந்தளவூக்கு கரிசனை செலுத்துகின்றம் எமது மேலதிக பாடவிதானங்களில் எந்தளவூக்கு நாம் பயிற்சியை மேற்கொள்கிறம், என்பது பற்றி மாணவர்களாகிய நாங்கள் சிந்திக்க வேண்டும். இவ்வடிப்படை சிந்தனை எம் இலட்சியத்தில் நம்பிக்கையை ஏற்படுத்த உதவூம்.
Subscribe to:
Post Comments (Atom)
♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥
-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் |||ஆம் தரத்திர்க்கு சேர்த்துக்கொள்ளும் திறந்த போட்டிப் பரீட்சை..
-
தலைமன்னார் பகுதியில் 10 வயதுச் சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பாடசாலை அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
-
கம்பஹா மாவட்டத்தில் உள்ள உற்பத்தி நிலையம் ஒன்றிலிருந்து மண்ணெண்ணெய் கலந்த தண்ணீர் போத்தல்களை நுகர்வோர் அபிவிருத்தி அதிகார சபையினர் கைப்பற்ற...
-
நேற்று கல்முனை பிரதேச செயலகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிஸ் தலைமையில் இடம்பெற்றது இதில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள்,
No comments:
Post a Comment
Leave A Reply