இலங்கையில் கடும்போக்கு பௌத்த
பிக்குகளுக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கும் இடையேயான மோதல்போக்கு
மேலும் வலுத்து வருவது போலத் தோன்றுகிறது.
அமைச்சரின் அலுவலத்தில் பொதுபல சேனா உறுப்பினர்கள்
பொதுபல சேனாவின் உறுப்பினர்கள் புதனன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்துக்குள் அத்துமீறு நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

காவல்துறையினருக்கும் மிரட்டல் என்று குற்றச்சாட்டுகள்
வட்டரக்க விஜித தேரர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அமைச்சர் என்கிற முறையில் தன்னை சந்திக்க முடியும், அதை பொதுபல சேனா உட்பட யாரும் தடுக்கவும் முடியாது அதை கேட்பதற்கு உரிமையும் கிடையாது என ரிஷாத் பதியுதீன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மிகவும் வேதனப்பட்டதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் பிபிசியிடம் தெரிவித்தார்.

கடந்த பல மாதங்களாகவே இருதரப்புக்கும் இடையே உரசல்கள் இருந்தன.
ஜாதிகபல சேனாவின் பிக்கு தமது மதத்துக்கும் தேசத்துக்கும் கேடு விளைவிக்கிறார் என பொதுபல சேனா கூறுகிறது. அவர் அவ்வாறு செய்யக் கூடாது என நேரில் சந்தித்து அறிவுறுத்துவதே தமது நோக்கம் எனவும் பொதுபல சேனாவினர் கூறுகிறார்கள்.

ஜாதிகபல சேனாவுக்கு எதிராக கோஷமிடும் பொதுபல சேனா பிக்குகள்
இந்தச் சந்திப்பின்போது, இலங்கையில் பௌத்த மதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அது குறித்து அரசு மௌனம் காப்பதாகவும் அவர்கள் மல்வத்த பீடாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply