தமிழ்நாட்டிலும் புதுச்சேரியிலும்
நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக
நடைபெற்றுவருகிறது.
பிற்பகல் மூன்று மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் 60.52
சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.
சென்னையில் வாக்குப்பதிவு தொடர்ந்து மந்தம்
சென்னையைப் பொறுத்தவரை, காலை முதலே வாக்குப்பதிவு
மந்தமாக உள்ளது. 3 மணி நிலவரப்படி, வடசென்னையில் 50.4 சதவீத வாக்குகளும்
தென் சென்னையில் 49.3 சதவீத வாக்குகளும் மத்திய சென்னையில் 48.55 சதவீத
வாக்குகளுமே பதிவாகியுள்ளன. அதேபோல, இடைத் தேர்தல் நடைபெரும் ஆலந்தூர்
சட்டப்பேரவைத் தொகுதியிலும் மூன்று மணிவரை 45.1 சதவீத வாக்குகள் மட்டுமே
பதிவாகியுள்ளன.
புதுச்சேரியில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு
பாண்டிச்சேரியைப் பொறுத்தவரை காலை முதலே
வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது. நான்கு மணி நிலவரப்படி,
புதுச்சேரியில் 68.03 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, தி.மு.க. தலைவர்
கருணாநிதி, தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், ம.தி.மு.க. தலைவர் வைகோ,
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த், பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ்
உள்ளிட்டவர்கள் தங்கள் வாக்குகளைப் பதிவுசெய்துள்ளனர். புதுச்சேரியில்
மத்திய அமைச்சர் நாராயணசாமி, முதல்வர் ரங்கசாமி ஆகியோர் தங்கள் வாக்குகளைப்
பதிவுசெய்துள்ளனர்.
2009ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில்
72.98 சதவீத வாக்குகளும் 2011ஆம் ஆண்டில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் 78.29
சதவீத வாக்குகலும் பதிவாயின என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில்
முதன்முறையாக தேர்தலையொட்டி மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலை 7 மணிக்குத் துவங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிவரை நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
Leave A Reply