
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள சமய முரண்பாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்து நாட்டுக்குள் அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்தில் சர்வமதத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த தீர்மானித்துள்ளதாகவும் ஜனாதிபதி கூறினார்.
பத்திரிகை ஆசிரியர்களை இன்று வியாழக்கிழமை (24) காலை சந்தித்த ஜனாதிபதி, தனது இந்த தீர்மானம் தொடர்பில் அறிவித்தார்.
சட்டத்தை மீறிச் செயற்படுவதற்கு எந்தவொரு நபருக்கோ அல்லது அமைப்புக்கோ ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை எனவும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தான் தனிப்பட்ட ரீதியில் கண்டறியப்போவதாகவும் ஜனாதிபதி இதன்போது உறுதியளித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply