பாகிஸ்தானின் மிகப் பெரிய
தொலைக்காட்சி
சேனலை முடக்கவேண்டும் என்று பாகிஸ்தானின் பாதுகாப்பு
அமைச்சகம், தேசிய ஒளிபரப்பு நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான
பெம்ராவைக் கோரியிருக்கிறது.பாகிஸ்தானின் ஜியோ டி.வி , நாட்டின் முக்கிய உளவுத்துறை நிறுவனத்துக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை ஒலிபரப்பியதை அடுத்து, இந்த நடவடிக்கை வருகிறது.
இந்தக் குற்றச்சாட்டு அடிப்படையற்றது, தவறாகப் புரிந்துகொள்ளப் படக்கூடியது என்று ஐ.எஸ்.ஐ கூறியிருந்தது.
கராச்சியில் காரை ஓட்டிச்சென்றபோது துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான ஹமித் மிர், தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜியோ டி.வியை முடக்க விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை பாகிஸ்தானின் சிவிலியன் மற்றும் ராணுவத் தலைவர்களுக்கிடையே முறுகல் நிலையை அதிகரிக்கும் என்று செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
ஆனால், பாகிஸ்தானின் மின்னணு ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் அமைப்பான, பெம்ராவுக்கு தற்போது தலைவர் இல்லதா நிலையில், இது குறித்து முடிவெடுக்க அது சற்று கால அவகாசம் எடுத்துக்கொள்ளும் என்று நோக்கர்கள் கூறுகின்றனர்
No comments:
Post a Comment
Leave A Reply