blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, April 25, 2014

விபத்தில் காயமடைந்த நபரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதாக கூறி வீதியில் வீசி சென்ற சாரதி

தம்புள்ள- குருணாகல்  பிரதான வீதியில் மெல்சிரிபுர என்ற இடத்தில் வாகன விபத்தில் காயமடைந்த ஒருவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லும் வழியில் பாதை ஓரமாக வீசிவிட்டுச் சென்ற சம்பவம் ஒன்று கொக்கரெல்ல பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. பின்னர் அந்த  நபர்  வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்ட போது மரணமடைந்துள்ளார்.
முச்சகரவண்டி விபத்தில் காயமடைந்த ஒருவரையே வைத்திய சாலையில் அனுமதிக்க எடுத்துச் செல்வது போல் பாசாங்கு செய்து குருணாகல்- தம்புள்ள வீதியில் 13ம் மைல்கள் அருகே தூக்கி வீசி விட்டுச் சென்றுள்ளதாகத் தெரிய வருகிறது.பின்னர் வைத்திய சாலையில் அனுமதித்த போதும் அவர் உயிரிழநதுளளதாகத் தெரிய வருகிறது.

முச்சக்கர வண்டி விபத்தை அவதானித்த ஒருவர் முச்சக்கர வண்டியின் இலக்கத்தை ஒரு இடத்தில் குறித்து வைத்திருந்ததன் காரணமாக  சந்தேக நபரை கைதுசெய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். இவர் கொழும்பிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்றின் சாரதி என்பதும் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது. 62 வயது சாரதியே இவ்வாறு சந்கேத்தில் கைதாகியுள்ளதாக கொக்கரெல்ல பொலீசார் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►