blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Monday, April 7, 2014

சிறுமி துஷ்பிரயோகம்: சாரதிக்கு விளக்கமறியல் நீடிப்பு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாண்யடி பிரதேசத்தில்  17 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேக நபரான பஸ் சாரதி 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டபோது, நீதவான் ஐ.எல்.றிஸ்வான் விசாரணை செய்ததன் பின்னர் மீண்டும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு திங்கட்கிழமை(7) உத்தரவிட்டுள்ளார்.

இவரை பிணையில் விடுதலை செய்ய வேண்டாமெனவும், விரைவான விசாரணையினையும், நீதியினையும் வழங்கக்கோரியும் அம்பாறை, மட்டக்களப்பு பெண்கள் அமைப்பைச் சேர்ந்த 23 பெண்கள், பொத்துவில் நீதிவான் நீதிமன்ற நீதவானுக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளதுடன, தாண்டியடி பிரதேசத்தில் திங்கட்கிழமை(07) விழிப்புணர்வு ஊர்வலத்திலும் ஈடுபட்டனர்.

தாண்டியடி பிரதேசத்தில் வசித்து வந்த 17 வயது சிறுமியை பாலியல் வல்லறவுக்குட்படுத்திய  சந்தேகத்தின் பேரில் அதே பிரதேசத்தைச் சேர்ந்த பஸ் சாரதி ஒருவர்(30வயது) கடந்த 24.03.2014ஆம் திகதி திருக்கோவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த சந்தேக நபரான பஸ் சாரதி இதற்கு முன்னரும் 2013 ஜூலை மாதம் ஒரு பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சந்தேகத்தின் பேரில் பொத்துவில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில்  இவ்வழக்கு தொடர்பான  விசாரணை தற்போதும் இடம்பெற்று வருகின்ற நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது..


தற்போதுடன் இரண்டாவது தடவையாகவும் அதே சாரதி  கைது செய்யபட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறான சம்பவங்களினால் பஸ்சாரதிகளின் மீதுள்ள நம்பிக்கையை மக்கள் இழந்துள்ளதுடன், பெண்கள், சிறுவர்களது பாதுகாப்பு, எதிர்காலம் என்பன கேள்விக்குறியாகி வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிக்கு சரியான தண்டனை வழங்குவதன் மூலம் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பங்கள் இடம்பெறுவதிலிருந்து பெண்களை பாதுகாக்குமாறும் விசாரணையை துரிதப்படுத்தி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு உரிய நீதி கிடைக்க வழிசெய்ய வேண்டுமெனவும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களைச்சேர்ந்த 23 பெண்கள் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளன.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►