மனிதனைப்போல பல்வேறு உயிரினங்களும் தங்கள் உணர்வுகளை, வெவ்வேறு ஒலிகள் மூலம் வெளிப்படுத்துகின்றன. இதில் நாய்கள் உள்ளிட்ட சில விலங்குகள் மனிதனின் வார்த்தைகளை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறும் செயல்படுகின்றன. நீர்வாழ் உயிரினங்களை எடுத்துக்கொண்டால், மனிதனுடன் பழகுவதில் டால்பின் ஒரு சிறந்த சமூகப்பிராணியாக கருதப்படுகிறது.
பொதுவாக டால்பின்கள் மனிதன் கேட்க முடியாத முறையில் ஒலி எழுப்பும். இந்த ஒலிகளை கேட்டு இவற்றை நவீன தொழில்நுட்பம் மூலம் மொழிபெயர்க்கும் முறையை டினைஸ் ஹெர்சிங் என்பவர் கண்டுபிடித்துள்ளார்.
அதன்படி கடலுக்கு அடியில் இயங்கும் ஹைட்ரோபோன்களை பொருத்தி, டால்பின்கள் எழுப்பும் ஒலிகள் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த ஒலிகளை வைத்து, ‘கடற்பாசி’ ‘அலைசவாரி’ என 8 வார்த்தைகளை டால்பின் மொழியிலேயே அவர் உருவாக்கினார். பின்னர் இந்த வார்த்தைகளை டால்பின்களிடம் கூறியபோது, கடற்பாசியை அவை அடையாளம் காட்டியதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply