blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Sunday, April 13, 2014

போதையில் சகோதரனின் காலை வெட்டியவர் கைது

போதையில் சகோதரனின் காலை வெட்டியவர் கைது


பொகவந்தலாவை - லெச்சுமி தோட்டம் மேல்பிரிவில், தனது சகோதரனின் காலை வெட்டி தூண்டாக்கிய ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு சகோதரர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மது போதையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து, தனது அண்ணனின் காலை இவர் கத்தியால் வெட்டி உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர் பொகவந்தலாவை வைத்தியசாலையில் இருந்து நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு பின், மேலதிக சிகிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

அத்தோடு சந்தேகநபர் கைது செய்யபட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

பொகவந்தலாவை பொலிஸார் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►