புத்தாண்டு மலரவுள்ளதால், இன்றும், நாளையும் நாட்டிலுள்ள அனைத்து மதுபான
விற்பனை நிலையங்களும் மூடப்படும் என கலால் திணைக்களம் தெரிவிக்கின்றது.
நாடெங்கிலும்
இரண்டு நாட்களும் சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்காக விசேட
குழுக்கள்
ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கலால் அத்தியட்சகர் பிரபாத் ஜயவிக்கிரம
குறிப்பிட்டார்.
மதுபான விற்பனை நிலையங்களை நடத்துவதற்கு,
சட்டரீதியாக அனுமதிப் பத்திரத்தை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் இந்த உத்தரவிற்கு
அமைய, செயற்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.
பொதுமக்களின் நலன்கருதி இந்த நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளதாக
கலால் அத்தியட்சகர் மேலும் கூறினார்.
No comments:
Post a Comment
Leave A Reply