பேஸ்புக்
சமூக வலைத்தளம் ஊடாக சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுதல்
நாட்டில் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை
தெரிவிக்கின்றது.
கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்
இந்த விடயம் தெரியவந்துள்ளதாக அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா
திஸாநாயக்க குறிப்பிட்டார்.
இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடும் இருவர் சந்தேகத்தின்பேரில் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
வெளிநாட்டவர்களால்
கடந்த காலங்களில் இவ்வாறான குற்றங்கள் இழைக்கப்பட்டபோதிலும், தற்போது
இலங்கையர்களே அதிகளவில் குற்றங்களில் ஈடுபடுவதாக சட்டத்தரணி அனோமா
திஸாநாயக்க மேலும் சுட்டிக்காட்டினார்.
No comments:
Post a Comment
Leave A Reply