மலேசியாவில் இருந்து திருப்பியனுப்பப்பட்ட போது, கைதுசெய்யப்பட்ட
நந்தகோபால் என்ற தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர் தொடர்பில் மேலதிக
விசாரணைகள்
முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் தலைமையகம் குறிப்பிடுகின்றது.குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
விசேடமாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச வலையமைப்பு மற்றும் இயக்கத்திற்கான நிதி சேகரிப்பு உள்ளிட்ட அதன் செயற்பாடுகள் தொடர்பில் அவரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.
வெளிநாட்டில் இருந்த காலப்பகுதியில் இலங்கைக்கு பணம் அனுப்பியமை மற்றும் உள்நாட்டு முகவர்கள் தொடர்பில் நந்தகோ
பாலிடம் விசாரிக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சர்வதேச செயற்பாட்டாளர்களான விநாயகம் மற்றும் நெடியவன் ஆகியோரை கைதுசெய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன மேலும் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment
Leave A Reply