8 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர், நஞ்சருந்திய நிலையில், சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முந்தல்
பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகாகும்புக்கடவல பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி
ஒருவரே, சந்தேகநபரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இதுதொடர்பில் முந்தல் பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் தாயார் முறைப்பாடு செய்துள்ளமையை அறிந்துகொண்ட சந்தேகநபர் நஞ்சருந்தியுள்ளார்.
நஞ்சருந்திய
நிலையில் நேற்று மாலை முந்தல் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட
சந்தேகநபர், மேலதிக சிகிச்சைகளுக்காக சிலாபம் ஆதார வைத்தியசாலைக்கு
மாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply