இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளை
விடுதலை செய்வது தொடர்பான வழக்கு ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாமினால்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என இந்திய உயர்நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
இந்த வழக்கின் ஏழு குற்றாவளிகளையும் விடுதலை
செய்வதற்கு தமிழக அரசு மேற்கொண்ட தீர்மானத்தை ஆட்சேபித்து மத்திய
அரசாங்கம் தாக்கல் செய்திருந்த மேன்முறையீட்டு மனுவை பரிசீலனைக்கு
எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளது.
ராஜிவ்
காந்தி கொலை வழக்கின் குற்றவாளிகளான முருகன், சாந்தன், பேரறிவாளன்
ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம்
திகதி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டிருந்தது
குறித்த மூவரும்
தாக்கல் செய்திருந்த கருணை மனுக்கள் மீது முடிவெடுப்பதில் கால தாமதம்
ஏற்பட்டதாக தெரிவித்தே உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தது.
மேலும்
குற்றவாளிகள் 23 ஆண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்துள்ளதால் உரிய சட்ட
நடைமுறையை பின்பற்றி அவர்களை விடுவிப்பதற்கான அதிகாரம் தமிழக அரசுக்கு
உள்ளதாக உயர்நீதிமன்றம் பரிந்துரைத்திருந்ததது.
இதனையடுத்து முருகன்,
சாந்தன் , பேரறிவாளன் மாத்திரமல்லாது இந்த வழக்கின் ஏனைய குற்றவாளிகளான
நளினி, ரொபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய நால்வரையும்
விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை தீர்மானித்தது.
இதன் தொடர்ச்சியாக
பெப்பரவரிமாதம் 20 ஆம் திகதி ராஜிவ் காந்தி கொலை வழக்கின் ஏழு
குற்றவாளிகளையும் விடுதலை செய்வதற்கான தீர்மானம் தமிழக சட்ட சபையில்
நிறைவேற்றப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்
இந்த நிலையில்
மூவரது மரண தண்டனை இரத்துச் செய்யப்பட்டமைக்கு எதிராக மறு சீராய்வு
மனுவொன்றை தாக்கல் செய்த இந்திய மத்திய அரசாங்கம், தமிழக அரசாங்கத்தின்
தீர்மானத்திற்கு எதிராகவும் மற்றுமொரு மனுவை தாக்கல் செய்திருந்தது.
இவர்களின்
விடுதலை தொடர்பான வழக்கு ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில்
விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் எனவும் மத்திய அரசின்
சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் வாதிட்டிருந்தனர்.
மனுக்களை
பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட இந்திய உயர்நீதிமன்றம் இந்த வழக்கின்
குற்றவாளிகளை விடுதலை செய்வதற்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்ததது.
மத்திய
அரசாங்கத்தின் மேன்முறையீட்டு மனுமீதான தீர்ப்பை இன்று அறிவித்த
இந்தியாவின் பிரதம நீதியரசர் ப. சதாசிவம் உள்ளிட்ட நீதியரசர்கள் குழாம்
இந்த வழக்கு ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் விசாரணைக்கு
எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என அறிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
Leave A Reply