blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Friday, April 25, 2014

அலரி மாளிகை நிகழ்வு: ஜனாதிபதியின் அழைப்பை ஐதேக புறக்கணிப்பு

அலரி மாளிகை நிகழ்வு: ஜனாதிபதியின் அழைப்பை ஐதேக புறக்கணிப்பு

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொதுநலவாய அமைப்பு நாடுகளின் கலாசார விழுமியங்களை கொண்டாடும் பொருட்டு அலரி மாளிகையில் நடைபெறவுள்ள நிகழ்வை எதிர்கட்சி புறக்கணிக்கத் தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 26ம் திகதி நடைபெறவுள்ள இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து ஐதேக தலைமைத்துவ சபை கூடி நிகழ்வை புறக்கணிப்பதென முடிவெடுத்துள்ளது.

பொதுநலவாய அமைப்பின் கொள்கைக்கு மாறாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் செயற்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐதேக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கை, கோட்பாடுகளை மீறி ஜனநாயகமற்று செயற்படும் இந்த அரசாங்கத்திற்கு அது தொடர்பான நிகழ்வை நடத்த அருகதை இல்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►