ஜாதிக பல சேனாவினால் கடந்த 9ஆம் திகதி நடத்தப்பட்ட ஊடகவியலாளர்
மாநாட்டின்போது வண. வட்டரெக்க விஜித்த தேரரரிடமிருந்து பொது பல சேனா
அமைப்பின் அங்கத்தவர் ஒருவர் பறித்துச் சென்றதாகக் கூறப்படும் ஐந்து
ஆவணக்கோவைகளும் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன என்று கொம்பனித்தெரு
பொலிஸார், கோட்டை நீதவான் நீதிமன்றில் தெரிவித்தனர்.
ஜாதிக பலசேனாவை சேர்ந்த வண. வட்டரெக்க விஜித்த தேரரின் கோவைகள் எனப்படும்
இவற்றை எடுத்துச் சென்ற பொது பல சேனா அமைப்பு, இவற்றை பொலிஸாரிடம்
ஒப்படைத்தது என்றும் அவர்கள் அவற்றை தவறுதலாக எடுத்துச் சென்றதாக
தெரிவித்ததாகவும் பொலிஸார், நீதிமன்றில் கூறினர். பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் உட்பட பொதுபலசேன பௌத்த பிக்குகள் பலர், மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டினுள் பலவந்தமாக புகுந்து தம்மை பயமுறுத்தி கூட்டத்தை குழப்பி தன்மையும் மிரட்டியதாக மகாவலி மகாவிகாரையை சேர்ந்த வண. விஜித தேரர் பொலிஸில் முறையிட்டிருந்தார்.
தன்மீது பிரயோகிக்கப்பட்ட நிர்பந்தம் காரணமாக தான் பீ.பீ.எஸ் முன்னணிய்ல் மன்னிப்பு கேட்டதாக வண.வட்டரெக்க விஜித்த தேரர் கூறியுள்ளார்.
நாட்டில் சமய மற்றும் இன ஒற்றுமைக்கு பங்கம் எற்படலாம் என்ற காரணத்தினால் பௌத்த பிக்குகளை தாம் கைது செய்யவில்லை என கொம்பனித்தெரு பொலிஸார் கூறினார்.
ஆயினும் இவர்கள் தண்டனை கோவையின் கீழ் தண்டிக்கப்பட கூடிய குற்றங்களை புரிந்ததாக பொலிஸார் மேலும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Leave A Reply