blogger templatesblogger widgets

எமது தளத்தை பார்வையிட்டோர்

Tuesday, April 22, 2014

பயங்கரவாத நிதிப்படுத்தல்களுக்கு எதிராக வழக்கு

யுத்தம் முடிந்து நான்கு வருடங்களின் பின்னர் மத்திய வங்கி நிதிப்புலனாய்வுப் பிரிவின் முன்னெடுப்பின் அடிப்படையில் சட்ட மா அதிபரினால் இந்த வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
சந்தேகத்துக்குரிய 498 நிதிக்கொடுப்பனவுகள் பற்றி நிதி புலன் விசாரணை பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டதென பதவிய வங்கியின் 2013 வருடாந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இவற்றில் 73 நிதிக்கொடுப்பனவுகள், குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பாரப்படுத்தப்பட்டதெனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரிவு, ஜப்பானிய நிதி புலனாய்வு மையம், லெபனான் விசேட புலனாய்வு ஆணையம், கொஸ்தாரிக்கா மற்றும் டென்மார்க்கின் நிதி புலனாய்வுப்பிரிவு ஆகியவற்றுடன் ஒப்பந்தங்களை செய்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகின்றது.

இந்த ஒப்பந்தங்கள் ஊடாக பயங்கரவாத நிதிப்படுத்தல், மாறும் பணச் சலவை ஆகிய விடயங்களில் தகவல்களை பகிர்வதற்கு வசதியேற்பட்டுள்ளது.
பயங்கரவாத்தை நிதிப்படுத்திய மூன்று வழக்குகள் மற்றும் ஏழு பணச்சலுகைகளை கடந்த வருடத்தில் சட்ட மா அதிபரின் ஊடாக தாக்கல் செய்ததாக மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Leave A Reply

♥அதிகம் வாசிக்கப்பட்டவை♥

◄சமீபத்திய பதிவுகள்►