ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு மீது அண்மையில்
ஹம்பாந்தோட்டையில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில்
கடமையை
உரிய முறையில் நிறைவேற்றாத பொலிஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை
எடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
காலி பிரதிப் பொலிஸ்
மாஅதிபர் காமினி அதுரட தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ்
ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தாக்குதல்
மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகளிடம்
எதிர்வரும் நாட்களில் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் குறிப்பிட்டார்.
தாக்குதலுக்கு உள்ளான சில பாராளுமன்ற
உறுப்பனர்களிடமும் வாக்கமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்
பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Leave A Reply