இலங்கை மக்களுக்கும், உலகின் புலம்பெயர் இலங்கையர்களுக்கும் அமெரிக்கா புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி
பரக் ஒபாமா மற்றும் அனைத்து அமெரிக்க மக்களின் சார்பாக விடுத்துள்ள
புத்தாண்டு செய்தியில், செழிப்பான மற்றும் ஜனநாயகமான இலங்கையை
உருவாக்குவதற்கு செயற்படும்போது பாதுகாப்பான, மகிழ்ச்சியான மற்றும்
சமாதானமான ஒரு புதுவருடம் அமைய வேண்டும் எனவும் அமெரிக்க இராஜாங்க செயலாளர்
குறிப்பிட்டுள்ளார்.
பொறுமை, நல்லிணக்கம் மற்றும் சமாதானம் என்ற
பெயரில் அனைத்து இலங்கையர்களும் ஒன்றுசேரும் இந்த தருணத்தில்,
அமெரிக்காவும் கைகோர்த்து புதுவருடத்தை கொண்டாடுவதாக ஜோன் கெர்ரி மேலும்
கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply