எதிர்வரும் ஓரிரு நாட்களில் பேக்கரி உற்பத்திகளுக்கு தட்டுப்பாடு
நிலவக்கூடும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பேக்கரி
தொழிலில் ஈடுபட்டுள்ள ஊழியர்களில் பெரும்பாலானோர் புத்தாண்டை முன்னிட்டு
தத்தமது சொந்த இடங்களுக்கு சென்றுள்ளமையே தட்டுப்பாடு ஏற்படுவதற்கு
காரணமாகியுள்ளது என அந்த சங்கத்தின் தலைவர்
என்.கே. ஜயவர்தன
தெரிவிக்கின்றார்.
இந்த நிலைமையின் கீழ், பேக்கரி உணவு உற்பத்திகள் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடளாவிய
ரீதியில் பேக்கரி ஊழியர்களில் 75 வீதமானவர்கள் சுமார் ஐந்து நாட்கள் வரை
விடுமுறையில் சென்றுள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தின்
தலைவர் கூறுகின்றார்.
வருடந்தோறும் பண்டிகைக் காலப்பகுதியில் இந்த
நிலைமை ஏற்படுவதுடன், அதன்மூலம் மக்களுக்கு தற்காலிகமாக அசௌகரியங்களை
எதிர்நோக்க நேரிடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
Leave A Reply