நுவரெலியா, பூண்டுலோயா தோட்டப் பகுதியில் இரவு உணவு உட்கொண்ட பின்னர்
திடீர் சுகவீனமுற்ற 50 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது சுமார் ஆயிரத்து 500 க்கும் அதிகமானோர் இந்த உணவை உட்கொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உணவை உட்கொண்ட பின்னர் வயிற்று வலியால் அவதியுற்ற 50 பேர் வரை கொத்மலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களின் நிலைமை குறித்து கவலையடையத் தேவையில்லை என்றும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
No comments:
Post a Comment
Leave A Reply