நைஜிரியத் தலைநகர் அபுஜாவிலுள்ள பஸ் நிலையமொன்றில் நடத்தப்பட்ட
தாக்குதலில் 70 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் நூற்றுக் கணக்கானவர்கள்
காயமடைந்துள்ளனர்.
மக்கள் பஸ்கள் மற்றும் வாடகை வாகனங்களில் பணிகளுக்கு செல்வதற்கு தயாராகிய போது இரண்டு வெடிச் ச
ம்பவங்கள் இடம்பெற்றுள்ளன
இந்த வெடிச் சம்பவங்களில் 124 பேர் காயமடைந்துள்ளதாக அந்த நாட்டு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்
குறித்த பஸ் தரிப்பிடத்தில் சடலங்கள் உள்ளதை அவதானிக்க முடிவதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
போஹோ ஹராம் ஆயுததாரிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
மீட்பு பணியாளர்கள் மற்றும் பொலிஸாரை சம்பவ இடத்தில் காணக் கூடியதாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
Leave A Reply